Remember Sai in ease, Sai will remember you in difficulty.
Remember Sai in young age, Sai will remember you in old age.
Remember Sai when you are healthy, Sai will remember you in sickness.
Remember Sai in free time, Sai will remember you in your busy time.
Remember Sai when you are alive, Sai will remember you when are dead.

சாய் உன்னை போற்றிடுவோமே.... பாடல் 5

நறுமணம் கமழும் கமலப்பூ நீ
உமை நாடி வந்தடையும் சிறு தேனி நான்...சாயி

நறுமணம்......

பாவங்கள் தீர்த்திடும் கோதாவரி நீ
உம்முடன் சங்கமிக்கும் சிற்றோடை நான்...பாபா

நறுமணம்......

வேண்டியதை அள்ளித்தரும் கற்பகத்தரு நீ
உமது நிழலில் ஒதுங்கிடும் சிட்டுக்குருவி நான்....சாயி

நறுமணம்......

சுவை பல மிகுந்த கற்கண்டு நீ
உமையே சுற்றிவரும் சிற்றெறும்பு நான்...பாபா

நறுமணம்......

பிரம்மமே உருவான அவதாரம் நீ
உம்பாதம் பற்றிடும் சிற்றடியேன் நான்...சாயி

நறுமணம்......

முக்காலமும் அறிந்திட்ட மும்மூர்த்தி நீ
எக்காலமும் உமை நினைத்திடும் சிறுதொண்டன் நான்...பாபா

நறுமணம்......

சகலத்திலும் நிறைந்திட்ட ஞானஒளி நீ
உமையே சுற்றிவரும் விட்டில் பூச்சி நான்...பாபா

நறுமணம்......

தூய தெய்வீகப் பேரின்பத்தின் இருப்பிடம் நீ
உமை துதித்து வாழும் சிறுபிள்ளை நான்...சாயி

நறுமணம்......

அகத்தே உறைந்திட்ட ஆத்ம ஞானம் நீ
உமை புறத்தே கண்டிட்ட பாக்கியசாலி நான்...பாபா

நறுமணம்......

சாய் உன்னை போற்றிடுவோமே.... பாடல் 4

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்....பாபா

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்....

கருணாகரனே கருணையின் வடிவே
கனவில் வந்து வரம் தருவாய்....சாயி

கருணாகரனே கருணையின் வடிவே
கனவில் வந்து வரம் தருவாய்

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்

பாண்டுரங்கா பண்டரிநாதா
உன்பாதம் பற்றிட வரம் தருவாய்....பாபா

பாண்டுரங்கா பண்டரிநாதா
உன்பாதம் பற்றிட வரம் தருவாய்

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்

மக்களின் வினைகளை மண்ணாக்கி
உந்நாமம் பாடிட வரம் தருவாய் ....பாபா

மக்களின் வினைகளை மண்ணாக்கி
உந்நாமம் பாடிட வரம் தருவாய்

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்

துனியின் உதியை மருந்தாக்கி
துயரங்கள் தீர்த்து அருள் புரிவாய்....சாயி

துனியின் உதியை மருந்தாக்கி
துயரங்கள் தீர்த்து அருள் புரிவாய்

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்

ஈசனின் உருவே ஈகையின் கடவுளே
உன் லீலைகள் பாடிட வரம் தருவாய்....பாபா

ஈசனின் உருவே ஈகையின் கடவுளே
உன் லீலைகள் பாடிட வரம் தருவாய்

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்

பிரம்மத்தின் உருவே பிரபஞ்சத்தின் கடவுளே
உனை பற்றி வந்திட வரம் தருவாய்....சாயி

பிரம்மத்தின் உருவே பிரபஞ்சத்தின் கடவுளே
உனை பற்றி வந்திட வரம் தருவாய்

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்

செய்த பாவங்களை உதியாக்கி
விமோசனம் தந்து வரம் தருவாய்....பாபா

செய்த பாவங்களை உதியாக்கி
விமோசனம் தந்து வரம் தருவாய்

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்.....சாயி

வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்

சாய் உன்னை போற்றிடுவோமே.... பாடல் 3


வா சாயி !

வா சாயி! வா சாயி! வா சாயி!

உள்ளம் மகிழ இல்லம் தேடி 
வா சாயி!

வியாழன் தோறும் விரதம் இருப்போம்
வா சாயி!

சாவடி எங்கும் தீபம் ஏற்றுவோம்
வா சாயி!

வா சாயி! வா சாயி! வா சாயி!

பௌர்ணமி தோறும் பூஜை செய்வோம்
வா சாயி!

பசித்து வருவோருக்கு அன்னம் அளிப்போம்
வா சாயி!

வா சாயி! வா சாயி! வா சாயி!

ராம நவமியை ரஹிமுடன் கொண்டாடுவோம்
வா சாயி!

துனியின் உதியை பிரசாதமாய் அளிப்போம்
வா சாயி!

வா சாயி! வா சாயி! வா சாயி!

விஷ்ணு நாமத்தை பாராயணம் செய்வோம்
வா சாயி!

மசூதி மாயியை மலர்களால் அலங்கரிப்போம்
வா சாயி!

வா சாயி! வா சாயி! வா சாயி!

கீதையின் ரகசியத்தை கீர்த்தனையாய் பாடுவோம்
வா சாயி!

அன்பும் அமைதியும் தட்சணையாய் அளிப்போம்
வா சாயி!

வா சாயி! வா சாயி! வா சாயி!

உள்ளம் மகிழ இல்லம் தேடி 
வா சாயி!


அன்ன பாபா போற்றிகள் !!!

1.ஓம் சாய்நாதா போற்றி ஓம்
2.ஓம் தட்சணாமூர்த்தி தத்த அவதாரா போற்றி ஓம்
3.ஓம் சாகர சாயியே போற்றி ஓம்
4.ஓம் பண்டரிபுர விட்டலே போற்றி ஓம்
5.ஓம் வேங்கட ஸ்மரணா போற்றி ஓம்
6.ஓம் கிருஷ்ணா ராம சிவா மாருதி ரூபா போற்றி ஓம்
7.ஓம் இறைவன் ஒருவனே என்பாய் போற்றி ஓம்
8.ஓம் பிறவி பிணி தீர்ப்பாய்  போற்றி ஓம்
9.ஓம் மதங்களை கடந்த மகானே போற்றி ஓம்
10.ஓம் நாக சாயியே போற்றி ஓம்
11.ஓம் வேண்டுவோர் துயர் தீர்க்கும் யோகியே போற்றி ஓம்
12.ஓம் சீரடி வாசா சித்தேஸ்வரா போற்றி ஓம்
13.ஓம் அற்புதங்கள் செய்யும் ஆண்டவா போற்றி ஓம்
14.ஓம் முக்திக்கு வழி காட்டும் முனிவா போற்றி ஓம்
15.ஓம் உள்ளத்தின் உள்ளே உறைபவரே போற்றி ஓம்
16.ஓம் ஆனந்தமயமானவரே போற்றி ஓம்
17.ஓம் சரண் அடைந்தோரை காப்பவரே போற்றி ஓம்
18.ஓம் யாமிருக்க பயமேன் என்பவரே போற்றி ஓம்
19.ஓம் விஷ்ணு நாம பாராயண பிரியரே போற்றி ஓம்
20.ஓம் சித்திரத்தில் உயிருடன் பேசும் தெய்வமே போற்றி ஓம்
21.ஓம் மாயையை விரட்டுபவரே போற்றி ஓம்
22.ஓம் கண் திருஷ்டி பில்லி சூன்யம் தீர்ப்பவரே போற்றி ஓம்
23.ஓம் பிரம்ம ஞானம் அளிப்பவரே போற்றி ஓம்
24.ஓம் குருவார தேவா போற்றி ஓம்
25.ஓம் சம்சார பயங்களை போக்குபவரே போற்றி ஓம்
26.ஓம் துனியின் உதியே மருந்தென்பாய் போற்றி ஓம்
27.ஓம் பிரார்த்தனைக்கு இளகுவாய் போற்றி ஓம்
28.ஓம் எளிமை வடிவானாய் போற்றி ஓம்
29.ஓம் சகலலோக சஞ்சாரியே போற்றி ஓம்
30.ஓம் முக்காலமும் உணர்ந்தவரே போற்றி ஓம்
31.ஓம் மும்மூர்த்தியின் திருஉருவே போற்றி ஓம்
32.ஓம் சகல ஜீவன்களிலும் இருப்பாய் போற்றி ஓம்
33.ஓம் மூன்றாம் பிறையில் காட்சி தருவாய் போற்றி ஓம்
34.ஓம் முந்தைய வினைகளை அறுப்பவரே போற்றி ஓம்
35.ஓம் ஓம்சாய்ராம் மந்திரத்தின் சக்தியே போற்றி ஓம்
36.ஓம் மதவேறுபாடுகளை களைந்தாய் போற்றி ஓம்
37.ஓம் உண்மை அன்புக்கு மகிழ்பவரே போற்றி ஓம்
38.ஓம் அன்ன பாபாவே போற்றி ஓம்
39.ஓம் இல்லறமும் நல்லறமே என்றாய் போற்றி ஓம்
40.ஓம் இளமையிலே துறவியானாய் போற்றி ஓம்
41.ஓம் உலகெல்லாம் உன் நாமமே போற்றி ஓம்
42.ஓம் தட்சிணை பிரியரே போற்றி ஓம்
43.ஓம் திக்கெட்டும் நீயே போற்றி ஓம்
44.ஓம் திக்கற்றோர்க்கும் நீயே போற்றி ஓம்
45.ஓம் சத்சரித சப்தாஹத்தில் அருள்வாய் போற்றி ஓம்
46.ஓம் தனதான்யம் அளிப்பாய் போற்றி ஓம்
47.ஓம் சிந்தையிலே விந்தை செய்வாய் போற்றி ஓம்
48.ஓம் கனவிலும் காட்சி அளித்தாய் போற்றி ஓம்
49.ஓம் நினைவிலும் காட்சி அளிப்பாய் போற்றி ஓம்
50.ஓம் நீர் ஊற்றி விளக்கேற்றினாய் போற்றி ஓம்
51.ஓம் துவாரகமாயி தெய்வமே போற்றி ஓம்
52.ஓம் சாவடியில் சயனிக்கும் சத்குருவே போற்றி ஓம்
53.ஓம் மகான்களின் தந்தையே போற்றி ஓம்
54.ஓம் ஆனந்த நிலையை அருள்வாய் போற்றி ஓம்
55.ஓம் நம்பிக்கை பொறுமை காணிக்கையாய் கேட்பாய் போற்றி ஓம்
56.ஓம் வெங்குசாவின் சீடரே போற்றி ஓம்
57.ஓம் பலருக்கும் படியளக்கும் பகவானே போற்றி ஓம்
58.ஓம் வாக்கு பலிதம் தந்திடும் சரஸ்வதியே போற்றி ஓம்
59.ஓம் வாழ்வாங்குவாழ வாழ்த்திடுவாய் போற்றி ஓம்
60.ஓம் உனை மறவா வரம் தருவாய் போற்றி ஓம்
61.ஓம் கலங்குவோர் மனம் களிக்கச் செய்பவரே போற்றி ஓம்
62.ஓம் குழந்தை வரம் அருளும் குருவே போற்றி ஓம்
63.ஓம் அன்னையாய் தந்தையாய் ஆதரிக்கும் அருளே போற்றி ஓம்
64.ஓம் உங்கள் காலடியே எங்கள் சீரடியாம் போற்றி ஓம்
65.ஓம் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழவைப்பாய் போற்றி ஓம்
66.ஓம் காம குரோதமதமாச்சர்யம் தீர்ப்பாய் போற்றி ஓம்
67.ஓம் காசி பிரயாகையை கால்விரலில் காட்டியவரே போற்றி ஓம்
68.ஓம் தீபங்களை ஏற்றி பாவங்களை போக்கினாய் போற்றி ஓம்
69.ஓம் தினம் தினம் தியானிப்பவர்களுக்கு சாய்லஷ்மி ரூபமானாய் போற்றி ஓம்
70.ஓம் சீரடியே பண்டரிபுரம் என்றாய் போற்றி ஓம்
71.ஓம் அன்பால் உலகமுழுவதும் ஒற்றுமை ஆக்கினாய் போற்றி ஓம்
72.ஓம் ஐந்து பிராணங்களை ஜோதியாய் ஏற்ற வைத்தாய் போற்றி ஓம்
73.ஓம் ஆரத்தி எடுப்பவரின் ஆறாத்துயர் தீர்ப்பாய் போற்றி ஓம்
74.ஓம் அருளாசியை பிரசாதமாய் அளிப்பாய் போற்றி ஓம்
75.ஓம் சுமைகளையேற்று பகைமையை போக்குவாய் போற்றி ஓம்
76.ஓம் கண்ணொளி தந்து காதொலி கேட்கச் செய்வாய் போற்றி ஓம்
77.ஓம் சரணம் அடைவோருக்கு கமல பாதம் காட்டுவாய் போற்றி ஓம்
78.ஓம் காலை ஆரத்தியில் கருணாமூர்த்தி  காட்சி ஆவாய் போற்றி ஓம்
79.ஓம் நிலையான ஞானம் நிலைக்கச் செய்வாய் போற்றி ஓம்
80.ஓம் சியாமா தாஸ்கணு மகல்சா தாத்யா சத்குருவே போற்றி ஓம்
81.ஓம் அல்லா இயேசு அன்னை அனைத்தும் ஆனாய் போற்றி ஓம்
82.ஓம் பக்திக்கேற்ப பலனளிப்பாய் போற்றி ஓம்
83.ஓம் மனதிற்கேற்ப வாழ்க்கை துணைநலம் அளிப்பாய் போற்றி ஓம்
84.ஓம் எப்பிறவியிலும் உன்னை ஏற்க வைப்பாய் போற்றி ஓம்
85.ஓம் யாகம் யோகம் ஏதுமின்றி மோட்சம் தரும் குருவே போற்றி ஓம்
86.ஓம் எல்லா மகான்களும் என் ரூபமே என்பாய் போற்றி ஓம்
87.ஓம் அன்னதானமே பிறவி நோய் தீர்க்கும் மருந்தென்பாய் போற்றி ஓம்
88.ஓம் கூட்டு பிரார்த்தனையால் குலம் வாழ வைப்பாய் போற்றி ஓம்
89.ஓம் உன்னை போற்றுவோரை உலகம் போற்ற வைத்தாய் போற்றி ஓம்
90.ஓம் இசையில் இணைந்து வருவாய் போற்றி ஓம்
91.ஓம் அன்னவஸ்திரங்களை அளவின்றி கொடுப்பாய் போற்றி ஓம்
92.ஓம் கோதாவரி நதி தீர கோயில் கொண்டாய் போற்றி ஓம்
93.ஓம் பூட்டி மாளிகை அலங்கரிக்க முரளிதரனானாய் போற்றி ஓம்
94.ஓம் வியாழ பூஜையில் வல்வினை நீக்கும் வியாழ மூர்த்தியே போற்றி ஓம்
95.ஓம் பரந்தாமா பரமேஸ்வரா பரமாச்சார்யா போற்றி ஓம்
96.ஓம் கண்கண்ட தெய்வமே கணபதியே போற்றி ஓம்
97.ஓம் பெளர்ணமி பூஜையில் பாவங்களை அழித்து நற்பலன் அருள்வாய் போற்றி ஓம்
98.ஓம் பாரிஜாத மலரே கற்பகத்தருவே காமதேனுவே போற்றி ஓம்
99.ஓம் நவகோள்களால் நன்மையும் நாவன்மையும் பெற வைப்பாய் போற்றி ஓம்
100.ஓம் தன்வினை நோய் தீர்க்கும் தன்வந்திரியே போற்றி ஓம்
101.ஓம் மீனாட்சி பக்தனை நீ ஆட்சி செய்தாய் போற்றி ஓம்
102.ஓம் நம்பினோரை கைவிடாத நாயகனே போற்றி ஓம்
103.ஓம் ராஜாராமா நாமமே தாரக மந்திரமென்பாய் போற்றி ஓம்
104.ஓம் அன்புக்கு அருள் நல்கும் அறிவே போற்றி ஓம்
105.ஓம் ராதகிருஷ்ணா சீதாராமா லஷ்மி நாராயணா போற்றி ஓம்
106.ஓம் சீநிவாசா சீவேங்கடேசா சீரங்கா போற்றி ஓம்
107.ஓம் சிவரூபா ஹரிஹரா சுப்ரமண்யா போற்றி ஓம்
108.ஓம் சகலமும் சத்குரு சாயிரூபமே போற்றி ஓம்

சாய் உன்னை போற்றிடுவோமே.... பாடல் 2

* சாயி
உம்மை கண்ணாரக் கண்டாலே
பெருகிடும் விழி வெள்ளமே!

* சாயி
உம்மை மனதார நினைத்தாலே
குளிர்ந்திடும் எங்கள் உள்ளமே!

* சாயி
உந்தன் நாமத்தை ஜெபித்தாலே
தெளிந்திடும் எங்கள் மனமே!

* சாயி
உந்தன் பாதம் தொட்டாலே
தீர்ந்திடும் எங்கள் பாவமே!

* சாயி
உந்தன் கதைகளைப் படித்தாலே
பெருகிடும் எங்கள் புண்ணியமே!

* சாயி
உந்தன் லீலைகளைக் கேட்டாலே
விலகிடும் எங்கள் பயமே!

* சாயி
உந்தன் உதியினை உண்டாலே
மறைந்திடும் எங்கள் பிணியே!

* சாயி
உந்தன் வழியினில் சென்றாலே
அடைந்திடுவோம் பிரம்ம ஞானமே!

* சாயி
உம்மை அனைத்திலும் உண்ர்ந்தாலே
ஒன்றிடுவோம் உம்முடனே!!


சாய் உன்னை போற்றிடுவோமே.... பாடல் 1


*தீபங்களை ஏற்றிடுவோமே சாய்
எங்கள் பாவங்களை நீக்கிடுவாயே நீ!

*உந்தன் லீலைகளை பாடிடுவோமே சாய்
எங்களை திருவடிகளில் சேர்த்திடுவாயே நீ!

*பொறுமையுடன் காத்திருப்போமே சாய்
எங்கள் நம்பிக்கைதனை வளர்த்திடுவாயே நீ!

*காணும் உயிர்களில் உனை காண்போமே சாய்
எங்களை எத்திசையிலிருந்தும் கண்டிடுவாயே நீ!

*தான தர்மங்கள் வழங்கிடுவோமே சாய்
எங்கள் கர்ம வினைகளை தீர்த்திடுவாயே நீ!

*அன்புதனை பொழிந்திடுவோமே சாய்
எங்களை அரவணைத்து காத்திடுவாயே நீ!

*புறங்கூறலை தவிர்த்திடுவோமே சாய்
எஙகள் புண்ணியங்களை பெருக்கிடுவாயே நீ!

*உதியே மருந்தாய் உண்டிடுவோமே சாய்
எங்களை உன்பால் ஈர்த்திடுவாயே நீ!

*அகங்காரத்தை அழித்திடுவோமே சாய்
எங்கள் ஆன்மாவினை உணர்த்திடுவாயே நீ!

*ஆரத்தியில் மகிழ்ந்திடுவோமே சாய்
எங்களை ஆதரவுடன் அணைத்திடுவாயே நீ!

*அபிஷேகத்தில் நனைந்திடுவோமே சாய்
எங்கள் ஆன்மீகத்தை உயர்த்திடுவாயே நீ!

*கனவில் உம்முடன் சஞ்சரிப்போமே சாய்
எங்களை கடமைதனை புரிந்திடச் செய்வாயே நீ!

*நித்தமும் உனை துதித்திடுவோமே சாய்
எங்கள் துயரங்களை துரத்திடுவாயே நீ!

*சிரத்தையுடன் வணங்கிடுவோமே சாய்
எங்களை ஷீரடிக்கு இழுத்திடுவாயே நீ!

*பாசத்துடன் உனை பார்த்திடுவோமே சாய்
எங்கள் பாரங்களை சுமந்திடுவாயே நீ!

*பிரம்மத்தை கற்றிடுவோமே சாய்
எங்களை எப்பிறவியிலும் தொடர்ந்திடுவாயே நீ!

*கலக்கத்துடன் உனை நாடிடுவோமே சாய்
எங்கள் கடவுளாக மாறிடுவாயே நீ!

*உங்கள் காலடி மலராக மாறிடுவோமே சாய்
எங்களை காலனிடமிருந்து காத்திடுவாயே நீ!

*சகலமும் சத்குருவே சாய்
சச்சிதானந்தப் பேரொளியாவாயே நீ!